Search

கவிதையின் கிறுக்கல்

வெறும் எழுத்துக்கள் அல்ல! உணர்வுகள்!!

அம்மா !

sowmia_poem

விழித்திடும் போதும், கண் உறங்கிடும் போதும்
நான் காண என் அருகில் காத்திருப்பாய்
முழு மதியை போல!
உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உறவுகள் கொடுத்து,
உறங்காமல் பாதுகாத்தாய் இந்த மண்ணில் நான் வாழ …
கனத்த உள்ளதோடு நான் நின்ற போதெல்லாம்,
கண்ணீர் துடைத்து, கரம் நீட்டினாய் ஒரு தேவதையை போல,
நீ தொடா உயரத்தை, நான் தொட வேண்டும் என்று,
தலை நீவி அனுப்பிவைத்தாய் விடுதிகல்லூரிக்கு.
பிரிவென்னும் சொல்லின் அர்த்தம் அறிந்ததே,
உன்னை பிரிந்த அந்த சில காலத்தில் தான்.
புதிதாய் பல உறவுகள் வந்தபின்பும்,
மாதம் தவறா சந்திப்பிற்கு ஏங்கியே கிடந்தது என் மனம் !
ஆயிரம் நல்லவைகள் நீ கற்றுக்கொடுத்தாய்,
உன் கனவுகளை நான் வாழ சுதந்திரம் கொடுத்தாய் !
திறமையுடன் வாழ வேண்டும் என அறிவுரையும் கொடுத்தாய்,
என்ன கிடைத்தாலும், எண்ணாதவை கிடைத்தாலும்…
நான் உன்னை போல ஒரு பெண்ணாகத்தான் வாழ விரும்புகிறேன் அம்மா !

எந்த முடிவிற்காக இந்த முன்னுரை !!

Tamil poems

60 வயது ஆனபின்பும் , ஆறு ஏழு தலைமுறை பார்த்தபின்பும் ,
சுகம் துக்கம் சுவைத்த பின்பும் ,
சோர்வின்றி உழைத்த பின்பும் ,
கோடிகளை கண்டா கரம் இருப்பினும் ,
காதலில் வென்று தோற்று , தோற்று வென்ற , வாழ்வு இருப்பினும்!
தாய் முகம் தேடியே விடியும் காலை பொழுதுகள்,
10 மாதங்கள் இருளில் சுகம் கண்டோம்,
உலகம் அறியும் வரை, உலகமென அவளையே சுற்றி வந்தோம்..
பணியில் நாம் பசி மறந்து போக,
நாம் பசியால் அவள் உன்ன மறந்து போவாள் ,
எதை சொல்ல , எதை மறக்க ..
காலம் கடந்து போகும் வழியில்,
உன்னை கடந்து போக எண்ணிய மனம் …
திசை அறியாமல் தேடி செல்கிறோம் ,
புது புது வாழ்வை,
மறந்துவிட வேண்டாம், வாழ்வு தந்த ஒரு உயிரை …
அம்மா !

விடையுடன் விடைபெற்ற நண்பர்

நண்பரே,
முயன்றபின் முடியாதது ஏதும் உண்டோ??
ஆணாக இருப்பின் பதிலை சற்று யோசித்தே வெளியிடு ..
பெண்ணின் பார்வையால் அவள் மனதை புரிய முயற்சித்து பார் !!
ஆணாக நீ தழுவும் முதல் தோல்வி அதுவே ஆகும் ..
உன் எண்ணங்கள் கொண்டு, நீ வீசும் பார்வையால் ..
தீட்டப்படும் ஓவியமே பெண்ணின் கண்கள் ..
ஓவியத்தின் உரிமையாளன் நீயே ஆனாலும் ..
உயிர் கொடுக்கும் உரிமையோ பெண்ணின் உணர்வு தான் ..
காதலா? நட்பா ? அவள் பார்வை கூறுவது என்னவோ ??
நட்பாக இருப்பின் ..உன் கண்கள் ,
அவள் கண்களை கண்டே உரையாடும் ..
காதலாக இருப்பின் .. உன் கண்கள் ,
அவள் கண்களை நோக்கிட இயலாமல் தவித்தே மன்றாடும் ..
மாற்றங்கள் காட்டுவது உன் கண்களோ உன் உணர்வுகளோ அல்ல ..
உனக்கான இடம் தரும் அந்த பெண்ணிடமே ..
கண்களை கொண்டே பதில் பேசிடும் பெண்களே ,
ஆண்களுக்கான தெளிவுரை தந்தமைக்கு
மன்னிப்பு கூறி நான் ..

அமிர்தமும் வேண்டாம், ஆயுளும் வேண்டாம்!!…

நொடியினில் மயங்கிடுவேன் உன் விழி வீசிடும் வலையினிலே,
மயக்கங்கள் தெளிந்திடவே வேண்டாம் என வரம் கேட்பேன்!
தயக்கங்கள் நீங்கி ..தன்னை மறந்த நிலை அடைந்தேன் உன் மெய் தீண்டலில்…
நொடியினில் துயர் நீக்கும் உன் புன்னகையில் கண்டிடுவேன் ஒரு கோடி கனவுகள் ..
விடியல் வேண்டாம் என்று எண்ணிய நாட்கள் அனைத்தும் உன்னோடு சேர்ந்திட்டது.
கொடியில் பூக்கும் மலர் போல காத்திருக்கும் காதலை துடிக்கும் உன் இதயத்திற்கு மாலையாய் சூட்டுவேன்!
ஒரு கையில் அமிர்தமும் …ஒரு கையில் புனிதமும் ..கொண்டு செய்த புன்னகையே ….
அமிர்தமும் வேண்டாம் …ஆயுளும் வேண்டாம் ..
ஒரு நாள் உன் மடியில் துயில் கொண்டால் போதும் .
இறுதி பக்கம் என்று நான் திருப்பிய புத்தகம் நீ!
முடிவுரையாய் தேடிய எனக்கு, தொடக்கமென அமைந்து விட்டாய்.
என் முடிவுரையோ உன் கரங்களால் எழுதப்படும்…

உனக்கான கவிதைகளுள் ஒன்று

யார் வரைந்த ஓவியமோ!
உன் புன்னகையால் வர்ணம் தீட்ட படுகிறது …

யார் இழைத்த பிழையோ!!
உன் நெஞ்சினால் காதல் செய்ய படுகிறது …

எந்த சலங்கையின் முத்தோ!!
உன் முத்தத்தால் உயிரில்
சங்கம படுகிறது ..

கார்காலத்தில் சிந்திய துளி ஒன்று,
கயல்விழியில் நில்லாமல் …
இதழ் கடந்து …
கரம் தழுவி ..
உன் உயிரில் கலந்திடவே ஆசை படுகிறது …

கருநீல மேகங்கள் சிந்தாத ஒளியனைத்தும் …
கண்ணனது கண்கள் காட்டிடவே …
மெய் சிலுற்கும் நொடியெல்லம் மெய் சிலுர்து நின்றிடுமே …
நினைவுகளிலும் நீயே வேண்டும் .
என் நித்திரையிலும் நீயே வேண்டும் …
என்னை மறந்திடவே
உன்னை நினைவாய் கொண்டேன் …

உன்னுள் வாழ்ந்திடுவேன் …உன்னை அறியாமல் உன்னை அள்ளி செல்லவே …
சென்றபின் சேர்த்திடுவேன் …உன்னால் நான் இழந்த சுயநினைவோடு …

ஏக்கத்துடன் …
உன் அருகே ஒஅர் இடம் வாங்க காத்திருப்பேன் ..
உலகின் இறுதி நொடியின் வரை …காதலோடு ..

எங்கு நீ சென்றாலும் உன்னோடு வரும் என் கவிதைகள்!!!

தருணங்கள் நிறைந்த நாட்கள் அனைத்தும் நினைவில் இருபதில்லை ..
நினைவிலிருக்கும் தருணங்களை உருவாக்கிடும் நபர்கள் விரைவில் கிடைபதில்லை ..
நீ !!
கனவில் வந்து , கரங்களில் ஏந்தி , விடிந்தபின் கலைந்திடும் நிழலா?
கூந்தல் கோதி காதல் சொல்லும் உன் விரல்கள் என்ன, மாயமாய் மறைந்திடும் தென்றலா?
இமைகள் மூடிய நேரத்தில், மனக்கதவை திறக்கும் உன் புன்னகை என்ன தேய்ந்திடும் நிலவா ?
என் வாசல் தேடி வந்த உன் பாதங்கள் என்ன தண்ணீரில் களைந்து போகும் எழுத்துகளா?
உதிர்ந்து கிடக்கும் இலையில் கூட உன் முகம் உணர்வேன் ..
கண்ணா , காதலை உணர்ந்திட நீ அருகில் தேவை இல்லை ..
நீ என்னுள் விட்டு சென்ற பாத சுவடுகளே போதும் ..
என்னை உன் பாதை கொண்டு சேர்த்துவிடும் ..
என்னை நீ பிரிந்தாலும் , உன் நினைவுகள் என்னும் வரம் கொண்டு வாழ்வேன் ..
உன் புன்னகையை நீ பறித்து சென்றாலும் ..
அதற்காக காத்திருக்கும் செடியாக உயிர் கொண்டிருப்பேன் ..
உன் வார்த்தைகளை அழித்து சென்றாலும் ..
மௌனத்திலே உன்னோட பேசிகொண்டிருபேன் ..
நான் வேண்டுவதெல்லாம் ஒன்று தான் ..
என்னை நீ விட்டு சென்றாலும் ..
என் கவிதைகளை அனாதை ஆக்கி செல்லாதே ..
உனக்கென மட்டும் பிரதிபலிக்கும் என் வார்த்தைகளையும்
உன்னை மட்டும் நம்பி வாழும் என் கவிதைகளையும் ..
அனாதை ஆக்கிவிடாதே …

அயராத விழித்திருக்கும் என் கண்களின் கேள்விக்கு விடை என்னவோ !!!

விடியலை கண்டபின்பும் , விளங்காத பல கனவுகள் ..உன்னால் தானோ ?

ஓர் உயிர் கொண்டு வாழும் உயிரிங்களின் மத்தியில்
உந்தன் உயிரையும் சுமந்து வாழ்ந்திடவே எனக்கிந்த பிறவியோ ?

கண்ணின் மணியில் வந்தமர்ந்த உன்னை , கண்ணீரில் கரைய விடுவேனோ ?

மடிமேல் தலைவெயத்து உறங்கும் உனக்கு …என் மூச்சை தாலாட்டாய் நான் தருவேனோ ?

கிறங்கி கிடக்கும் எந்தன் நினைவுகளை , புதுபித்திட உன் கரங்கள் தான் ஆயுதமோ ??

இவ்வுலகில் ஒரு தனி உலகம் உண்டெனில் அது உன் கண்கள் தானோ ?

என் கேள்விகள் எதுகைஆனல் , உன் பதில்கள் மோனை ஆகுமோ ??

உன்னில் என்னை காண , உனக்காக என்னை காண ,
காதல் தான் வழியெனில் ,
இன்றே இறந்திடுவேன் , காதலின் மடியில் .!!!

கவிதைகளின் கரு காதலா ??

ஆயிரம் கவி கண்கள் சொல்லும் !! இயற்கையின் இடையில் ..
பல நூறு கவிதைகள் எழுதும் மழையில் நனைந்த கைகள் ..
தாயின் அன்பில் கவிதை ..
தந்தையின் அரவணைப்பில் கவிதை ..
எதில் இல்லை கவி ??? விடை இல்லா கேள்வி ..
நதியின் அழகில் , குயில் குரலில் , குழந்தையின் சிரிப்பில் …
எதில் இல்லை கவி ??? விடை இல்லா கேள்வி ..
எதில் இருபினும் ..
என்னவனின் புன்னகையில் இருக்கும் கவியே ,
இறைவன் எழுதிய முதல் கவி ..
என்னுள் காதல் உருவாக ..
எனகென ஒரு உறவாக ..
என்றும் என் கனவாக ..
என்னுள் கலந்திட்ட நினைவாக ..
எனக்கான ஒரு உயிராக ..
எழுதிட்டான் என்றோ ..எனகென ஒரு கவியை ..
ஊனரவெஇதது இன்று …
காதலே கவிதையின் கருவென்று ..

அன்பில் எதிர்பார்ப்புகள் இல்லை!!

லட்சம் எதிர்ப்புகளை வீழ்த்திவிட்டு …பெருமிதத்தோடு உன்னை அடைவேன்..
உன் புன்னகை என்னும் பலம் என்னோடு இருந்தால் ..
உன்னை மறந்து நீ உறங்க ,
என் மனம் இன்றி வேறோர் இடம் உண்டா என்ன ?
உன் கைகளில் ஏந்தீ என் விழிகளை பார்க்கும் உனக்கு ,
என் காதலை உணர முடியும் ..
உனக்காக மட்டுமே என்னுள் இருக்கும் என் உயிரின் ஓசையை உணர முடிந்ததா ?
உணராவிட்டாலும் உனக்காக மட்டுமே துடிக்கும் ஒரு உயிர் என் உயிர் மட்டுமே !!

Blog at WordPress.com.

Up ↑